'தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' ரிலீஸ் தேதியை அறிவித்த சன்பிக்சர்ஸ்!

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து நேற்று சென்சார் செய்யப்பட்டது என்பதும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யுஏ’ சான்றிதழ் அளித்தனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை வெளியிட்டு உள்ளது .

இந்த போஸ்டரில் தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம் எதிர்பார்த்தபடியே ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியானதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.