'பீஸ்ட்' புரமோ படப்பிடிப்பில் விஜய்யுடன் கலந்து கொண்ட பிரபலங்கள் யார் யார்?

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் புரமோ வீடியோ விரைவில் வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சமீபத்தில் இந்த வீடியோவுக்கான படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவுக்கான படப்பிடிப்பில் விஜய்யுடன் சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் நெல்சன் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ’பீஸ்ட்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதி இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த பாடலின் புரமோ வீடியோவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் தினத்தில் ’பீஸ்ட்’ புரமோ வீடியோ வெளியாகலாம் என்று கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.