டிரம்ஸ் வாசிக்கும் விஜய்: புகைப்படத்தின் பின்னணி இதுதான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மணி நேரங்களாக விஜய் டிரம்ஸ் வாசிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த புகைப்படத்தின் பின்னணியில் நெல்சன் உள்பட படக்குழுவினர் உள்ளனர் என்பதும் இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தகது.
இந்த நிலையில் இந்த புகைப்படத்தின் பின்னணி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பின் இடையில் விஜய் எதார்த்தமாக அங்கிருந்த இசைக் கருவிகளை பார்த்து உடனே வாசிக்கத் தொடங்கியதாகவும், இதனை பார்த்த இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் விடிவி கணேஷ், உடனே சாக்சோபோனை வாசிக்கும்படி விஜய்யிடம் கூறியதாகவும், அப்போது அங்கு வந்த இயக்குனர் நெல்சனும் அதில் இணைந்து கொண்டதாகவும் இந்த கண்கொள்ளா காட்சியை பார்த்த புகைப்படக் கேமராமேன் இதனை புகைப்படம் எடுத்துள்ளார் என்றும், இந்த புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்த புகைப்படத்தை ‘பீஸ்ட்’ படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தின் போது வெளியிடலாம் என்று நெல்சன் கூற அங்கிருந்த படக்குழுவினர் சிரித்ததாகவும் கூறப்படுகிறது.
‘பீஸ்ட்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும், இம்மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com