மாலத்தீவு, மரவீடு, நீச்சலுடையில் நடனமாடும் பூஜா ஹெக்டே: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Sunday,November 14 2021]

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே மாலத்தீவு சென்றுள்ளதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் ’பீஸ்ட்’ படம் மற்றும் தெலுங்கு மற்றும் ஹிந்தி பிரபலங்களுடன் நடித்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அவர் கடலுக்கு நடுவில் மரத்தாலான வீட்டில் தங்கியிருக்கும் காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

அதில் ஒரு வீடியோவில் அவர் நீச்சல் உடையில் செம நடனம் ஆடும் காட்சியும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் மாலத்தீவின் அழகிய காட்சிகள், விமானத்தில் செல்லும் போது எடுக்கப்பட்ட அற்புதமான புகைப்படங்களும் உள்ளன. இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.