நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி அபாரம்: 'பீஸ்ட்' 5 நாள் வசூல் நிலவரம்!

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியான நிலையில் இந்தப் படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் நெகட்டிவ் விமர்சனங்கள் ஏராளமாக குவிந்தன. ஆனாலும் நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி கடந்த 5 நாட்களில் இந்த படம் தற்போது 200 கோடி ரூபாய் வசூல் என்ற மைல்கல்லை தொட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

‘பீஸ்ட்’ படம் கடந்த 5 நாட்களில் இந்தியாவில் மட்டும் 135 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் டிரேடிங் வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே விஜய் நடித்த ’மெர்சல்’ ’சர்கார்’, ‘பிகில்’ ‘மாஸ்டர்’ ஆகிய படங்கள் 200 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில் தற்போது ‘பீஸ்ட்’ படமும் ஐந்தாவதாக இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

‘பீஸ்ட்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த போதிலும் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதை அடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.