எதிர்பார்த்த அதே டைட்டில் தான்: 'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Sunday,December 31 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 68’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் ’G.O.A.T’ என்று கசிந்த நிலையில் அதே டைட்டில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த டைட்டில் போஸ்டரில் இரண்டு வித்தியாசமான விஜய்யின் கெட்டப்பும் உள்ளது என்பதும் குறிப்பாக அதில் ஒன்று விஜய்யின் இளமை காலகட்ட கிராபிக்ஸ் கெட்டப், விஜய்யை 20 வருடங்களுக்கு முன் பார்த்தது போல் உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் இந்த டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.