close
Choose your channels

'தளபதி 67' படத்தின் டைட்டில் இதுவா?

Tuesday, July 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 66வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் ’தளபதி 67’ படத்தின் செய்திகள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தின் பல விஷயங்கள் லீக் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் படங்களை எடிட்டிங் செய்யும் எடிட்டர் பிலோமின்ராஜ் குறித்த செய்தி ஒன்றில் அவர் என்னென்ன படங்களுக்கு எடிட்டிங் செய்து வருகிறார் என்பது குறித்த தகவல் உள்ளது.

அதில் தளபதி 67 படத்தை குறிப்பிட்டு அதற்கு அருகே ’நான் வாழும் உலகம்’ என குறிப்பிட்டுள்ளதால் இதுதான் ’தளபதி 67’ படத்தின் டைட்டிலாக இருக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் ’தளபதி 67’ படத்தின் திரைக்கதையை இன்னும் லோகேஷ் கனகராஜ் என்னும் எழுதி முடிக்கவில்லை என்றும் அதை எழுதி முடித்த பின்னர்தான் அவர் டைட்டில் குறித்து முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது. எனவே அதிகாரபூர்வமான டைட்டில் வெளிவரும் வரை இந்த படத்தின் தற்காலிக டைட்டில் ’தளபதி 67’ என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment