'தளபதி 67' படத்தின் டைட்டில் இதுவா?

தளபதி விஜய் நடித்து வரும் 66வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் ’தளபதி 67’ படத்தின் செய்திகள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தின் பல விஷயங்கள் லீக் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் படங்களை எடிட்டிங் செய்யும் எடிட்டர் பிலோமின்ராஜ் குறித்த செய்தி ஒன்றில் அவர் என்னென்ன படங்களுக்கு எடிட்டிங் செய்து வருகிறார் என்பது குறித்த தகவல் உள்ளது.

அதில் தளபதி 67 படத்தை குறிப்பிட்டு அதற்கு அருகே ’நான் வாழும் உலகம்’ என குறிப்பிட்டுள்ளதால் இதுதான் ’தளபதி 67’ படத்தின் டைட்டிலாக இருக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் ’தளபதி 67’ படத்தின் திரைக்கதையை இன்னும் லோகேஷ் கனகராஜ் என்னும் எழுதி முடிக்கவில்லை என்றும் அதை எழுதி முடித்த பின்னர்தான் அவர் டைட்டில் குறித்து முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது. எனவே அதிகாரபூர்வமான டைட்டில் வெளிவரும் வரை இந்த படத்தின் தற்காலிக டைட்டில் ’தளபதி 67’ என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ரஜினியின் 'ஜெயிலர்' படம் குறித்த செம அப்டேட்!

சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளது என்பது தெரிந்ததே.

வேற லெவல் கிளாமர்: வைரலாகும் யாஷிகா ஆனந்த் வீடியோ

நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா வேற லெவல் கவர்ச்சி காஸ்டியூம் உடன் கூடிய வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

வெறும் உள்ளாடை மட்டும்: பூஜா ஹெக்டே ஸ்டில்களை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!

நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்த புகைப்படங்களை பதிவு செய்திருப்பது பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர். 

இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்: சினிமா ரசிகர்கள் செம குஷி

தமிழ் திரை உலகில் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் 5 திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் சினிமா ரசிகர்களுக்கு குஷியாகி உள்ளது. 

திரையரங்கில் சூப்பர்ஹிட்டான 'வீட்ல விசேஷம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜீ 5 தளம், இந்த ஆண்டின் மிகவும் கொண்டாடப்பட்ட தமிழ் குடும்ப பொழுதுபோக்கு படமான 'வீட்ல விசேஷம்' படத்தை, ஜூலை 15, 2022 முதல், உலகம் முழுக்க திரையிடுகிறது !!