close
Choose your channels

'தளபதி 67' படத்தின் அறிவிப்பு எப்போது? லோகேஷ் கனகராஜின் மாஸ் திட்டம்!

Monday, October 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தை விட தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர் என்பதும் இந்த படம் நிச்சயம் தமிழ் திரை உலகில் ஒரு மிகப்பெரிய வசூல் சாதனையை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

’விக்ரம்’ என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய்யுடன் இணைந்து இருப்பதால் இந்த படத்திற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 27ஆம் தேதி முடிவடையும் உள்ளதாகவும் அதன் பின்னர் ஒரு சில நாட்கள் வெளிநாடு சென்று ஓய்வு எடுக்கும் விஜய், ‘தளபதி 67’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தின் முறையான அறிவிப்பு தீபாவளி அன்று வெளியாகும் என்றும் அதே நாளில் ’வாரிசு’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது எனவே இந்த தீபாவளி தளபதியின் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ’தளபதி 67’ படத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகின்றன. இந்த படத்தில் சஞ்சய் தத் உட்பட 6 வில்லன்கள் இருப்பதாகவும் இந்த படம் ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக் படம் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தை இதுவரை இல்லாத அளவில் பிரம்மாண்டமாக உருவாகக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக ’விக்ரம்’ படத்தின் இறுதியில் வந்த ரோலக்ஸ் கேரக்டரை இந்த படத்தில் புகுத்த அவர் மாஸ் திட்டம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment