பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: விஜய்யின் புதிய உத்தரவு..!

  • IndiaGlitz, [Wednesday,May 10 2023]

தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இயற்கை பேரிடரின் போது பொதுமக்களுக்கு உதவி செய்யும் முதல் நபராக விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் தான் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியான நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் கல்வி படிப்பதற்கு வசதி இல்லாத மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து மாணவர்களின் விவரங்களை மாவட்டம் தோறும் அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பொருளாதார நிலை காரணமாக உயர்கல்வி படிக்க முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் இந்த முடிவுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு நேரில் பரிசளிக்க உள்ளார் நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களை சென்னைக்கு அழைத்து பரிசளிக்க உள்ளார் என்று விஜய் மக்கள் இயக்க வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

சரத்குமாரின் அடுத்த படத்தில் வில்லனாகும் கெளதம் மேனன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

ஒருவழியாக சம ஊதியம் வாங்கி விட்டேன்… விஜய் பட நடிகையின் உற்சாகமான பேட்டி!

விஜய் நடிப்பில் உருவான ‘தமிழன்’ திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

79 வயதில் 7 ஆவது குழந்தை… காதலி பற்றி அறிவிக்காத காட்ஃபாதர் நடிகரை நச்சரிக்கும் ரசிகர்கள்!

‘காட்ஃபாதர்‘, ‘டாக்ஸி டிரைவர்‘ போன்ற பால ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து உலகம் முழுக்க பிரபலமானவர் நடிகர் ராபர்ட் டி நிரே

பாகுபலி டூ ஆதிபுருஷ்… எய்ட்பேக் நடிகர் பிரபாஸின் பிட்னஸ் ரகசியங்கள் என்ன?

இயக்குநர் ஓம் ரவுத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஆதிபுருஷ்’

படம் முடிஞ்சு சாரா பேசவே இல்ல - இளம்வயது ஆதித்த கரிகாலன்

சமீபத்தில் வெளியாகிய பொன்னியின் செல்வன்  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.