மீண்டும் வெளிநாடு கிளம்பிய விஜய்.. 'கோட்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

  • IndiaGlitz, [Saturday,May 11 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த மாதம் 19 ஆம் தேதி விஜய் சென்னை வந்த நிலையில் அவர் சென்னை திரும்பிய பின்னர் ரஷ்யாவில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளதை அடுத்து இன்று தளபதி விஜய் சென்னையில் இருந்து துபாய் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் துபாய் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது ரசிகர்கள் ’விஜய் அண்ணா’ என்று கோஷமிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் துபாய் செல்லும் விஜய், அங்கிருந்து அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அமெரிக்காவில் தான் மீண்டும் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இந்த படப்பிடிப்புடன் ‘கோட்’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் இந்த படத்தின் 50 சதவீத டப்பிங் பணியை முடித்து விட்டதாகவும் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பியதும் மீதி உள்ள டப்பிங் பணியையும் முடித்து விடுவார் என்றும் அதன் பின்னர் ’தளபதி 69’ படத்திற்கு அவர் தயாராவார் என்று கூறப்படுகிறது.

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.