அஜித் வீட்டுக்கு சென்று விஜய் ஆறுதல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் தந்தை இன்று காலை காலமான நிலையில் அஜித்தின் வீட்டிற்கே நேரடியாக சென்று விஜய் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
அஜித்தின் தந்தை இன்று காலை காலமானார் என்பதும் அவருக்கு பல திரையுலகம் மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரிலும் தொலைபேசியிலும் ஆறுதல் கூறி வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
மேலும் முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, உலகநாயகன் கமல்ஹாசன், பாமக தலைவர் அன்புமணி, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்பட பல திரையுலக, அரசியல் பிரபலங்கள் அஜித்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் அஜித்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான விஜய், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments