யோகிபாபுவுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்: வைரல் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே. குறிப்பாக யோகி பாபு ஹீரோவாக நடித்த ’மண்டேலா’ என்ற திரைப்படம் தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திரையுலகில் பிஸியாக இருக்கும் யோகி பாபு அவ்வப்போது தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் விளையாட்டை விளையாடுவார் என்பதும், அவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் யோகி பாபுவின் கிரிக்கெட் திறமையை பார்த்து அவருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை தளபதி விஜய் பரிசாக கொடுத்துள்ளார். விஜய் கொடுத்த பேட் உடன் கூடிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள யோகிபாபு, ‘இந்த பேட்டை எனக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஆக கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். பேட் மற்றும் ஹெல்மெட் உடன் இருக்கும் யோகி பாபுவின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய்யுடன் நடிகர் யோகிபாபு பீஸ்ட், பிகில், மெர்சல், சர்கார் உள்பட பல படங்களில் நடித்துள்ள நிலையில் விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Intha bat aa enaku surprise a kodutha Vijay anna ku thankyou??@actorvijay #thalapathyvijayyogibabu pic.twitter.com/SI08LJNrFJ
— Yogi Babu (@iYogiBabu) December 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments