close
Choose your channels

விஜய்யின் 'தளபதி 66' படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா? ரஜினியை முந்திவிட்டாரா?

Friday, August 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே இருந்து வருகிறார் என்பதும் அவர் ஒரு படத்திற்கு ரூபாய் 100 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சம்பள விஷயத்தில் தளபதி விஜய் முந்திவிட்டதாக தெரிகிறது.

தளபதி விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அவரது அடுத்தப் படத்தை தெலுங்கு பிரபல இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக உள்ளது என்பதும் முதல் முறையாக விஜய் நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து வெளியாகியுள்ள தகவலின்படி இந்த படத்திற்கு விஜய் சம்பளம் ரூபாய் 120 கோடி என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மை என்றால் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்திய திரை உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய்தான் என்பது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் 70 முதல் 80 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிக்கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் அடுத்த படத்திற்கு கிட்டத்தட்ட 40 முதல் 50 கோடி ரூபாய் வரை சம்பளம் ஏற்றி உள்ளது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment