தளபதி 65: ஜார்ஜியாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் என்ன? கசிந்த தகவல்

  • IndiaGlitz, [Saturday,May 01 2021]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 65’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக தேர்தல் நடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஓட்டு போட்டு விட்டு அன்றைய தினம் இரவே விஜய் மற்றும் படக்குழுவினர் ஜார்ஜியா சென்றனர்.

மழை மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் படக்குழுவினர் எதிர்பார்த்தபடி காட்சிகளை படமாக்கி சமீபத்தில் சென்னை வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது ஜார்ஜியாவில் என்னென்ன காட்சிகள் படமாக்கினார்கள் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. அந்த தகவலின்படி ஜார்ஜியாவில் தீவிரவாதிகளுடன் விஜய் மோதும் காட்சிகள் படமாக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு டூயட் பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. இதிலிருந்து இந்த படம் ஒரு பக்கா ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சனின் முந்தைய படமான ’கோலமாவு கோகிலா’ முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட படமாக இருந்த நிலையில் இந்த படம் அதற்கு நேர்மாறாக அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஆரம்பகட்ட பணிகள் சென்னையில் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிரது. விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்தப் படத்தில், அபர்ணாதாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.