ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்காக விஜய் ரசிகர்கள் செய்த உதவி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் திறக்கவில்லை என்பதை அடுத்து ஆன்லைனில் தான் வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஆன்லைன் வகுப்புகள் படிப்பதற்கு அனைத்து மாணவர்களுக்கும் வசதி இல்லை என்பதும் ஒரு சிலர் செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் உள்ளிட்டவை இல்லாமல் உள்ளனர் என்பதும் அதுமட்டுமின்றி இன்டர்நெட் வசதி இல்லாத மாணவர்களும் பலர் இன்னும் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தளபதி விஜய்யின் கடலூர் மேற்கு மாவட்டதளபதி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஆன்லைன் வகுப்புகள் படிக்க வசதி இல்லாத மாணவர், மாணவிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு உதவி செய்யும் வகையில் லேப்டாப், மொபைல் போன், கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கொடுத்து மாணவ-மாணவிகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கு உதவி செய்து வருகின்றனர். மேலும் 10,12ஆம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் ஆன்லைன் மூலம் வழிகாட்டு நிகழ்ச்சிகளுக்கும் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளின் இந்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.