close
Choose your channels

'தளபதி 66' படத்தில் விஜய்க்கு இந்த கேரக்டரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Monday, February 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ திரைப்படத்தில் அவர் இரண்டு வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் ஒரு அவற்றில் ஒரு வேடம் இதுவரை அவர் நடிக்காத வித்தியாசமான கேரக்டர் என்றும் வெளியான தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

’தளபதி 66’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதை குறித்த தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இளைஞர் மற்றும் வயதானவர் என்ற இந்த இரண்டு கேரக்டரில் வயதான கேரக்டர் மன நிலையில் மாற்றம் உள்ளவர் போல் உள்ள கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இதுவரை நடித்திராத கேரக்டர் என்பதால் இந்த கேரக்டரில் அவருடைய வித்தியாசமான நடிப்பு பரிமாணம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’அழகிய தமிழ் மகன்’, ’கத்தி’ மற்றும் ’பிகில்’ ஆகிய 3 படங்களில் இரட்டை வேடங்களில் விஜய் நடித்து இருந்த நிலையில் தற்போது நான்காவது முறையாகவும் அவர் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்றும் அவர் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்ய தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment