ஷோஸ் எல்லாம் சூப்பரா பண்றிங்கள் தளபதியிடம் வாழ்த்து பெற்ற விஜே

  • IndiaGlitz, [Friday,March 02 2018]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சன் நெட்வொர்க் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சன் டிவி ரசிகர்களின் பேராதரவை பெற்ற விஜே மணிமேகலை படப்பிடிப்பின்போது தளபதி விஜய்யை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது 'ஷோஸ் எல்லாம் சூப்பரா பண்றிங்க' என்று விஜய், மணிமேகலைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த பாராட்டால் மகிழ்ச்சி அடைந்த விஜே மணிமேகலை இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: படப்பிடிப்பின் இடையில் என்னிடம் விஜய் கைகொடுத்த தருணம் மிகவும் மகிழ்ச்சியான தருணம். அதுமட்டுமின்றி ஷோஸ் எல்லாம் சூப்பரா பண்றிங்க என்று அவரிடம் இருந்து கிடைத்த பாராட்டு எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு. விஜய் அண்ணாவுக்கு எனது நன்றிகள்' என்று பதிவு செய்துள்ளார்.