'பீஸ்ட்' படத்தின் ஆக்சன் சவுண்ட் எஃபெக்ட்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் வீடியோ!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் மூன்று நாட்களுக்குரிய டிக்கெட்டுகள் விற்பனை முடிந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களின் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் வரும் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் தமிழகத்தின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இந்த நான்கு நாட்களில் மிகப்பெரிய வசூல் குவியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் வீடியோக்களை அவ்வப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன்னர் ஆக்சன் காட்சிகளின் சவுண்ட் எஃபெக்ட் வீடியோவை வெளியிட்டுள்ளது.

41 வினாடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோவில் உள்ள சவுண்ட் எஃபெக்ட் மிகவும் துல்லியமாகவும், ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை பார்க்கும் போது இந்த படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

More News

'ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கு தாய்லாந்து பீச்சில் ஆட்டம் போட்ட தமிழ் நடிகை!

விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கு தமிழ் நடிகை ஒருவர் ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

கறுப்பு காஸ்டியூமில் தாய்மையைக் கொண்டாடும் பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாகவும்

டிராபிக்கில் மாட்டிக்கொண்டு லூட்டி அடித்த கிரிக்கெட் ஜாம்பவான்… வைரலாகும் வீடியோ!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் சாலை பயணத்தில் செய்த அதிரடியான

'பாட்ஷா' ஆட்டோக்காரன் கெட்டப்பில் சிம்பு: வைரல் வீடியோ

ஆட்டோக்காரன் என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது 'பாட்ஷா' படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் கேரக்டர் தான் என்பதும் பெரும்பாலான ஆட்டோக்களில் இன்றும் பாட்ஷாவின் போஸ்டர்

சிஎஸ்கேவின் தோல்விக்கு தோனியே காரணம்… கடுமையாக விமர்சித்த மூத்த வீரர்!

ஐபிஎல் சீசன் லீக் போட்டிகளில் சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.