ஷூட்டிங் முடிஞ்சுருச்சுங்கிற தைரியமா? நெல்சனை மிரட்டிய விஜய்யின் சன் டிவி பேட்டி!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ’பீஸ்ட்’ படத்தின் டிரைலர் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தகட்டமாக சன் டிவியில் விஜய் அளித்த பேட்டி விரைவில் ஒளிபரப்பாகும் என்று செய்திகள் வெளியான.

இந்த நிலையில் தற்போது இந்த பேட்டியின் புரமோ வெளியாகி உள்ளது. அதில் ஒரு குட்டி கதை கூறுங்கள் என விஜய்யிடம் நெல்சன் கேட்க , ‘ஸ்டாக் இல்லை’ என்று விஜய் கூறுகிறார். அப்போது நெல்சன், ‘நல்லா பாக்கெட்டுல தேடி பாருங்க சார், எங்கேயாச்சும் இருக்கும்’ என்று கூற அதற்கு விஜய், ‘ ஷூட்டிங் முடிஞ்சுருச்சுங்கிற தைரியத்தில என்ன வேணும்னாலும் கேட்பிங்களா? என்று சிரித்து கொண்டே காமெடியாக மிரட்டும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது.

மொத்தத்தில் நெல்சன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் கலகலப்பாக பேசும் இந்த பேட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டி சன் டிவியில் ஏப்ரல் 10ஆம் தேதி இரவு 9 மணிக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.