தளபதி விஜய்யுடன் ஜெயம் ரவி சந்திப்பு: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Monday,September 06 2021]

தளபதி விஜய் நேற்று சென்னையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் அதே நிகழ்ச்சிக்கு வந்த ஜெயம் ரவி அவரை சந்தித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

தளபதி விஜய் தற்போது ’பீஸ்ட்’ படத்தின் 4வது கட்ட படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட டூயட் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் விஜய் கலந்து கொண்டார். இதே நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யுடன் இணைந்து ஜெயம் ரவி மற்றும் விக்ரம் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.