'தளபதி 68' படத்தில் விஜய்க்கு இவ்வளவு சின்ன வயது கேரக்டரா? மாஸ் காட்சிகளுக்கு உத்தரவாதம்..!

  • IndiaGlitz, [Monday,October 02 2023]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 68’ படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும் நாளை முதல் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படம் குறித்த ஆச்சரியமான தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பாக அமெரிக்காவில் தளபதி விஜய்யின் முழு உடல் 3டி ஸ்கேன் செய்யப்பட்டு அவரது இளவயது கேரக்டருக்காக கிராபிக்ஸ் உருவாக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் 25 வயது இளைஞனாக விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சர்வதேச தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விஜய்யின் ஸ்டண்ட் மற்றும் நடனக் காட்சிகள் படமாக்க இருப்பதாகவும், இதற்காக உலக அளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் பயன்படுத்த இருப்பதாகவும், அதிரடி ஸ்டாண்ட் காட்சிகளை 20 கேமராக்கள் கொண்டு படமாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

25 வயது இளைஞர் மற்றும் 50 வயது அப்பா கேரக்டர் என இரண்டு விதமான வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுவது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன், த்ரிஷா, பிரியங்கா மோகன், மீனாட்சி சவுத்ரி, அரவிந்த்சாமி, பிரபுதேவா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த படத்தில் மோகன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.