ராகவா லாரன்ஸ் கோரிக்கையை ஏற்று கொண்ட விஜய்: லாக்டவுன் முடிந்ததும் சந்திக்க விருப்பம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ராகவா லாரன்ஸ் அவர்கள் மாற்றுத்திறனாளி சிறுவர் ஒருவர் விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் பாடலை மிக அருமையாக பாடியதாக செய்தி வெளியிட்டு இருந்தார். மேலும் அந்த சிறுவனுக்கு விஜய் படத்தில் பாட வாய்ப்பு கொடுக்கும் வேண்டும் என்று அவர் விஜய்யிடமும் அனிருத்திடமும் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்த டுவிட் ஒன்றையும் ராகவா லாரன்ஸ் பதிவு செய்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்று இரவு விஜய்யிடம் தான் இதுகுறித்து பேசியதாகவும் லாக்டவுன் முடிந்தவுடன் அந்த சிறுவனை அழைத்து வர விஜய் கூறியதாகவும் சிறுவன் பாடுவதை நேரில் கேட்க ஆவலுடன் இருப்பதாகவும் விஜய் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அந்த சிறுவனுக்கு அனிருத் இசையில் பாட வாய்ப்பு கிடைக்க தான் உதவி செய்வதாக விஜய் தெரிவித்துள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நண்பர் விஜய் அவர்களுக்கும், அனிருத் அவர்களுக்கும் தனது மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஒரு சிறுவனின் மிகப்பெரிய கனவு நனவாகும் தருணம் வந்துவிட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
My Big thanks to Nanban Vijay and Anirudh sir @actorvijay @anirudhofficial pic.twitter.com/ZULMRngOaf
— Raghava Lawrence (@offl_Lawrence) May 10, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com