33 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் 'தளபதி' ஜோடி? இந்த படத்திலாவது இணைத்து வைங்கப்பா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தளபதி’ திரைப்படத்தில் நடித்த நடிகை மீண்டும் ரஜினி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’வேட்டையன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் ’தலைவர் 171’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’தலைவர் 171’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனேகமாக கடந்த 90களில் பிரபல நடிகையாக இருந்த ஷோபனா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் நடித்த ‘தளபதி’ திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தில் ரஜினி, ஷோபனா ஆகிய இருவரும் காதலிப்பது போன்ற காட்சிகள் வரும். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர் அரவிந்த்சாமி அரவிந்த்சாமியை திருமணம் செய்வது போல் கதை இருக்கும்.
இந்த நிலையில் ‘தளபதி’ படத்திற்கு பிறகு 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் ஷோபனா நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திலாவது அவரை ரஜினியுடன் ஜோடி ஆகும் வாய்ப்பை கொடுங்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் வரும் 22ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments