தளபதி 69' படத்தின் பூஜை.. புகைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!

  • IndiaGlitz, [Friday,October 04 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படம் ஆன 'தளபதி 69’ படத்தின் பூஜை இன்று நடைபெறும் என்றும் நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று ’தளபதி 69’ படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ள நிலையில் இது குறித்து புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்ஷன்ஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே உள்பட பலர் கலந்து கொண்ட புகைப்படங்கள் அதில் உள்ளன.

தளபதி விஜய் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் கேவிஎன் புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் பூஜை எளிமையாகவும் சிறப்பாகவும் நடந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த பூஜையில் விஜய் உடன் நாயகி பூஜா ஹெக்டே, வில்லன் நடிகர் பாபி தியோ, இயக்குனர் எச் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் ஜோடியாக பூஜாக ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் பாபி தியோ, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, மமீதா பாஜு உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். அனிருத் திசையில் உருவாகும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வகுமார், படத் தொகுப்பாளராக பிரதீப் ராகவ், உடை வடிவமைப்பாளராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் பணிபுரிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.