'தளபதி 69' படத்தின் டெக்னிக்கல் கலைஞர்கள் யார் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் பற்றிய அறிவிப்புகள் சில நாட்களாக வெளியானதை பார்த்தோம். இந்நிலையில், அடுத்த கட்டமாக இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 69’ திரைப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார்; வில்லனாக பாபி தியோல் நடிக்கவிருக்கும் நிலையில் மேலும், மமிதா பாஜு, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக வெளியான அறிவிப்பை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில், அடுத்த கட்டமாக, ’தளபதி 69 ’திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வகுமார், படத் தொகுப்பாளராக பிரதீப் ராகவ், உடை வடிவமைப்பாளராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
எச் வினோத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது. இன்றைய பூஜையில் கலந்து கொள்வதற்காக, மும்பையில் இருந்து சென்னை வந்ததாக நடிகை பூஜா ஹெக்டே தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார்.
Welcome onboard @sathyaDP, @ActionAnlarasu, @Selva_ArtDir, @PradeepERagav, #Pallavi & @gopiprasannaa ♥️
— KVN Productions (@KvnProductions) October 3, 2024
SEE YOU TOMORROW 🔥#Thalapathy69CrewReveal#Thalapathy69CrewReveal#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain… pic.twitter.com/FK4Y2mUT5C
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments