'தளபதி 69' படத்தில் இந்த கூட்டணியா? முதல்முறையாக விஜய்யுடன் இணையும் மாஸ் இயக்குனர்..!

  • IndiaGlitz, [Sunday,December 17 2023]

தளபதி விஜய் நடித்து வரும் 68வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில் இந்த படம் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துருக்கியில் நடைபெறும் என்றும் இன்னும் சில நாடுகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 69’ படத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது .

மேலும் இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் முறையாக விஜய்யுடன் கார்த்திக் சுப்புராஜ் இணைவாரா? இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அமைச்சர் உதயநிதியிடம் நிவாரண நிதி கொடுத்த 'டிமாண்டி காலனி 2' படக்குழு.. எத்தனை லட்சம்?

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக திரை உலகினர் தாராளமாக நிதியளித்து வருகின்றனர் என்பதை

இது வெறும் ஆரம்பம் மட்டுமே.. தங்கக்காப்பு பரிசளித்து வாழ்த்திய ஹரிஷ் கல்யாண்..!

ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் இயக்குனருக்கு தங்க காப்பு பரிசளித்த ஹரிஷ்

அன்பு காட்டினால் சண்டை போட முடியாது.. வன்மம் என்கிட்ட இருக்குது.. சுய கணிப்பில் போட்டியாளர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய அடுத்த புரோமோவில் போட்டியாளர்களிடம் உங்களைப் பற்றிய சுய கணிப்பு என்ன? என்பது குறித்து கமல்ஹாசன் கேட்கிறார்.

பொங்கல் ரிலீஸை உறுதி செய்த 'அயலான்' படக்குழு.. நீதிமன்ற உத்தரவு என்ன ஆச்சு?

 சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' மற்றும் வைபவ் நடித்த 'ஆலம்பனா' ஆகிய இரண்டு திரைப்படங்களை வெளியிட தடை என சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இப்ப இருக்குற பூர்ணிமா ரியல் பூர்ணிமா.. கமல்ஹாசனிடம் கூறிய சக போட்டியாளர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களைத் தாண்டி இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இன்றைய புரோமோவில் 'பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்காக தன்னை மாற்றி கொண்டனர், ஆனால் மனம் மாறாமல்