'தளபதி 69' படத்தில் இந்த கூட்டணியா? முதல்முறையாக விஜய்யுடன் இணையும் மாஸ் இயக்குனர்..!

  • IndiaGlitz, [Sunday,December 17 2023]

தளபதி விஜய் நடித்து வரும் 68வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில் இந்த படம் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துருக்கியில் நடைபெறும் என்றும் இன்னும் சில நாடுகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 69’ படத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது .

மேலும் இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் முறையாக விஜய்யுடன் கார்த்திக் சுப்புராஜ் இணைவாரா? இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.