close
Choose your channels

'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு எப்போது? நாயகி, வில்லன் யார்?

Tuesday, October 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 69வது திரைப்படத்தை எச் வினோத் இயக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது நடைபெறும் என்பதற்கான தகவல் கசிந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகவிருக்கும் ’தளபதி 69’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் இந்த படத்தின் பூஜை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என்றும், அக்டோபர் 5ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு இரண்டு வாரங்கள் நடைபெறும் எனவும், அதன் பின்னர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' மாநாடு முடிந்த பின்பு அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

’தளபதி 69’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி படமாக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், இதற்காக தனியார் ஸ்டுடியோ ஒன்றில் மிகப்பெரிய செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கவிருக்கும் நிலையில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சிகள் தான் முதல் கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் இந்த படத்தின் வில்லனாக நடிக்க உள்ளார் என்றும், இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment