close
Choose your channels

இந்த படத்தின் ரீமேக்கா 'தளபதி 69'? உண்மையாக இருந்தால் வேற லெவல்..!

Saturday, October 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில், இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த படம் சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 69’. இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே, வில்லனாக பாபி தியோல் மற்றும் கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பாஜு, பிரகாஷ் ராஜ், நரேன் உட்பட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது என்றும், ஒரு அதிரடியான பாடல் காட்சி என்றும் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படம் பிரபல தெலுங்கு நடிகர் என்.டி.ஆர் பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவான ’பகவந்த் கேசரி’ என்ற படத்தின் ரீமேக் தான் ‘தளபதி 69’ என்று சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த படம் ஒரு கமர்சியல் வெற்றிப்படம் மட்டுமின்றி, ஒரு வலிமையான சமூக கருத்தும் கூறப்பட்டுள்ளது என்பதால், விஜய் தனது கடைசி படத்தின் கதையைதேர்வு செய்திருக்கிறார் என்றும், அரசியலில் என்ட்ரியாக இருக்கும் நிலையில், தனது கடைசி படம் மக்களுடன் எமோஷனலாக ஆக இருக்க இந்த படம் உதவியாக இருக்கும் என்று அவர் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், படக்குழுவினர் இதனை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment