விஜய்யின் 'தளபதி 69' படத்தின் நாயகி இவர்தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,October 02 2024]

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 69 வது திரைப்படமான ’தளபதி 69’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல் தற்போது, ‘தளபதி 69’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ், தனது சமூக வலைதளங்களில், படத்தின் நாயகி குறித்த அறிவிப்பை வெளியிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

எச் வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படம், அரசியல் மற்றும் விவசாயம் தொடர்பான கதை அம்சத்தை கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்ற செய்திகள் பரவியுள்ளதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.