கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது 'தளபதி 69'.. இயக்குனர், இசையமைப்பாளர் யார்? அறிவிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Sunday,March 31 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 69’ படத்தை இயக்குவது யார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் ’கோட்’ படத்தின் ரிலீஸுக்கு முன்பே இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் ’தளபதி 69’ படத்தின் இயக்குனர் யார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்த நிலையில் தற்போது எச் வினோத் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதை ஒரு சமூக பிரச்சனை மற்றும் அரசியல் சார்ந்தது என்றும் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு மிக சரியான படமாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் 2025 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ’தளபதி 69’ படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக இருந்த நிலையில் தற்போது இந்த கேள்விக்கு கிட்டத்தட்ட பதில் கிடைத்துவிட்டதை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.