'தளபதி 69' படத்தில் இணைகிறாரா 'மாஸ்டர்' பிரபலம்.. எச். வினோத் நெருங்கிய நண்பர்..!

  • IndiaGlitz, [Thursday,May 09 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 69’ படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

’தளபதி 69 ’திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் அவர் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’தளபதி 69’ படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் ஒளிப்பதிவாளர் என்பதும் அதுமட்டுமின்றி எச் வினோத் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ஒளிப்பதிவாளரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எச் வினோத்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சத்யன் சூரியன் ’தளபதி 69’ படத்தின் கேமராமேன் என்று கூறப்படுவதை அடுத்து இந்த படத்தில் விஷுவல் ட்ரீட் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.