'தளபதி 69' படத்தின் இன்னொரு நாயகி அறிவிப்பு.. வேற லெவல் தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,October 02 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மற்றொரு நாயகி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ரசிகர்கள் மகிழ்ச்சியில் மிதக்கின்றனர்.

தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 69' திரைப்படத்தை இயக்குபவர் எச் வினோத் இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கேவி.என் புரடொக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை மிகுந்த பிரமாண்டத்துடன் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் பூஜை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் எனவும், படப்பிடிப்பு அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் இந்த படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ’பிரேமலு’ படத்தில் பிரபலமான மமிதா பாஜு தமிழ் ரசிகர்களிடமும் புகழ்பெற்ற நிலையில், தற்போது 'தளபதி 69' திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படம் அவரது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்னும் யாரெல்லாம் இப்படத்தில் இணைவார்கள் என்பதை ஆர்வத்துடன் காத்திருக்கலாம்.