'தளபதி 69' படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? 20 வருடங்களுக்கு முன் திரையுலகை கலக்கியவர்..!

  • IndiaGlitz, [Monday,September 09 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளன. இந்த நடிகை கடந்த 20 வருடங்களுக்கு முன் தமிழ் திரை உலகத்தை கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தளபதி 69’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை மமிதா பாஜு நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

விஜய் மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் ’ஒன்ஸ்மோ’ என்ற திரைப்படத்தில் முதல் முதலாக இணைந்து நடித்து அதன் பின்னர் ’துள்ளாத மனமும் துள்ளும்’ ’பிரியமானவளே’ ’யூத்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் விஜய் சிம்ரன் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் சினேகா நடித்த நிலையில் தற்போது அடுத்த படத்தில் சிம்ரன் நடிக்க இருப்பது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

'சிறகடிக்க ஆசை' ரோகிணி கணவரை பார்த்ததுண்டா? திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதில் அண்ணாமலை - விஜயாவின் மூத்த மருமகளாக ரோகிணி நடித்து வருகிறார்

மஞ்சு வாரியருடன் ரஜினியின் சூப்பர் டான்ஸ்.. 'வேட்டையன்' மனசிலாயோ பாடல் ரிலீஸ்..!

'வேட்டையன்' படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர் மற்றும் அனிருத் இணைந்து டான்ஸ் ஆடும் காட்சிகள் இருப்பதை அடுத்து ரஜினி ரசிகர்கள்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின்  எச்சரிக்கை அறிவிப்பு.. என்ன நடந்தது?

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை காதல் சரண்யாவின் ஆன்மீக உலகம்: முருக பக்தி முதல் சித்தர் கோவில்கள் வரை!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை காதல் சரண்யா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஆன்மீகம் மீது கொண்டுள்ள ஆழமான ஈடுபாட்டை ஆன்மீகக்ளிட்ஸில் பகிர்ந்துள்ளார்.

வெள்ளித்திரையில் ஹீரோவாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகர்.. குவியும் வாழ்த்துக்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகர் தற்போது வெள்ளி திரையில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.