தளபதி 69.. புத்தாண்டு தினத்தில் டபுள் விருந்து.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்..!

  • IndiaGlitz, [Sunday,December 15 2024]

புத்தாண்டு தினத்தில் 'தளபதி 69’ படத்தின் இரண்டு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ’தளபதி 69’ படத்துடன் சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்துள்ளார். விஜய்யின் கடைசி படம் என்பதால், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு புத்தாண்டு தினத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

டிசம்பர் 31ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு ’தளபதி 69’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும், ஜனவரி 1 புத்தாண்டு தினத்தில் அதிகாலை 12 மணிக்கு இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் முழு விவரங்களையும் அறிவிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா, ஜெயம் ரவி மூவருக்கும் சம்பளம் இல்லை.. அப்படி இருந்தும் 'எஸ்கே 25' பட்ஜெட் இத்தனை கோடியா?

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 25வது படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, மற்றும் சுதா கொங்காரா ஆகிய மூவரும் சம்பளம் பெறாமல்,

த்ரிஷாவை அடுத்து 'சூர்யா 45' படத்தில் இணைந்த 2 நட்சத்திரங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், இந்த படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

AI இல்லை.. DeAging டெக்னாலஜி இல்லை.. இளமைக்கு இயல்பாக திரும்பிய அஜித்..!

வயதான நடிகர்களின் இளமை தோற்றத்திற்கு DeAging டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அஜீத் எந்தவித டெக்னாலஜியும் இல்லாமல் இயல்பாக இளமைக்கு

அல்லு அர்ஜுனனுக்காக நான் அழவில்லை.. சமந்தா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், அவரை அவரது மனைவி கட்டி அணைத்து கண்ணீர் விட்ட வீடியோவை நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்

முடிவுக்கு வந்தது சத்யாவின் பிக்பாஸ் பயணம்.. இன்னொரு எவிக்சன் உண்டா?

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் எவிக்சன் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.