ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர்.. விஜய்யின் 'தளபதி 69' அறிவிப்பு.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் என்ற கேப்ஷனுடன் விஜய் நடிக்கும் ’தளபதி 69’ படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் ஒரு பக்கம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவரது 69வது படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வேலையாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டரில் ’ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர்’ என்ற கேப்ஷனுடன் கையில் ஒரு தீபத்துடன் இருக்கும் ஸ்டில் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படத்தை எச் வினோத் இயக்க உள்ளார் என்றும் அனிருத் இசை அமைக்க உள்ளார் என்றும் இந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த படம் வெளியாகும் என்றும் இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரல் ஆகி வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Big day for us! After #Master and #Leo, I am elated to associate as Co-Producer for the special #Thalapathy na movie - #Thalapathy69 ♥️
— Jagadish (@Jagadishbliss) September 14, 2024
Thanks to @actorvijay na for all the love and support. Grateful forever🤗
Thrilled to collaborate with #HVinoth and my dear Rockstar… pic.twitter.com/zNHDuTA6L8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments