ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர்.. விஜய்யின் 'தளபதி 69' அறிவிப்பு.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..

  • IndiaGlitz, [Saturday,September 14 2024]

ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் என்ற கேப்ஷனுடன் விஜய் நடிக்கும் ’தளபதி 69’ படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் ஒரு பக்கம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவரது 69வது படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வேலையாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டரில் ’ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர்’ என்ற கேப்ஷனுடன் கையில் ஒரு தீபத்துடன் இருக்கும் ஸ்டில் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தை எச் வினோத் இயக்க உள்ளார் என்றும் அனிருத் இசை அமைக்க உள்ளார் என்றும் இந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த படம் வெளியாகும் என்றும் இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரல் ஆகி வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

காமெடி நடிகர் கருணாகரன் வீட்டில் நிகழ்ந்த சோகம்.. திரையுலகினர் இரங்கல்..!

பிரபல காமெடி நடிகர் கருணாகரன் வீட்டில் மிகப் பெரிய சோகம் நிகழ்ந்துள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் கருணாகனுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் ரூ.10 லட்சம் நிதியுதவி.. ரஜினிகாந்த் மகள் அறிவிப்பு..!

ஒவ்வொரு வருடமும் இயக்குனர் சங்கத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறி இருப்பதை அடுத்து அவருக்கு இயக்குனர்

சூர்யாவின் 'கங்குவா' ரிலீஸ் தேதி இதுவா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் வெளியாவதால்...

பல ரகசியங்கள் உள்ளன.. என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது.. பிக்பாஸ் குறித்து மாயா..!

பிக் பாஸ் தமிழ் 8வது சீசன் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்பதும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு

வருங்கால கணவருடன் செம்ம ரொமான்ஸ்.. மேகா ஆகாஷ் மெஹந்தி புகைப்படங்கள்..!

நடிகை மேகா ஆகாஷ் திருமண திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய