'நான் மதம் மாற மாட்டேன்': சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த 'தளபதி 69' நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தில் நடிக்க இருக்கும் பிரபல நடிகை மதம் மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவும் நிலையில், நான் எந்த காரணத்தை முன்னிட்டு மதம் மாற மாட்டேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கார்த்தி நடித்த ’பருத்தி வீரன்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகை பிரியா மணி, தமிழ், தெலுங்கு திரையுலகில் மட்டும் இன்றி, ஹிந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் தளபதி விஜய் நடிக்கும் 69வது திரைப்படத்தில் இணைந்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில், பிரியா மணி சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டதால் மதம் மாறிவிட்டேன் என்று சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள் என்றும், நான் மதம் மாறிவிட்டேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
நான் மதம் மாற மாட்டேன் என்று திருமணத்திற்கு முன்பே என் கணவரிடம் தெரிவித்து விட்டேன். நான் இந்து மதத்தில் பிறந்தவர் என்பதால் எப்போதும் என் நம்பிக்கையை பின்பற்றுவேன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர், அவரவர் நம்பிக்கையை மதிக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், நான் ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டதால் எனக்கு பிறக்கப் போகும் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்கள் என்றும் எனக்கு சிலர் மெசேஜ் அனுப்பி உள்ளனர்; அது என்னை மிகவும் பாதித்துள்ளது. ஜாதி மதத்தை மீறி திருமணம் செய்து கொண்ட பலர், மத வேறுபாடு இன்றி ஒருவரை ஒருவர் காதலித்து வரும் நிலையில், ஏன் இந்த அளவுக்கு வெறுப்பு காட்டப்படுகிறது என்று எனக்கு புரியவில்லை என்றும் பிரியாமணி கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments