'தளபதி 68' படத்தின் கதை இதுவா? வேற லெவலில் யோசித்த வெங்கட்பிரபு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 68வது திரைப்படம் ’தளபதி 68’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் அப்பா - மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடிக்க இருப்பதாகவும் இரண்டு கேரக்டர்களை 3D VFX ஸ்கேன் டெக்னாலஜி மூலம் உருவாக்குவதற்காக விஜய் உள்பட படக்குழுவினர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் அப்பா - மகன் கேரக்டரில் விஜய் நடிக்க இருக்கும் நிலையில் இதில் ஒரு கேரக்டர் ரா ஏஜென்ட் என்றும் அப்பா மகன் இடையே ஏற்படும் மோதல் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் திரைக்கதை ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக இருக்கும் என்றும் வேற லெவல் காட்சிகளை விஜய்க்காக வெங்கட் பிரபு யோசித்து வைத்திருப்பதாகவும் இந்த படம் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இரட்டை வேடங்களில் விஜய் நடிக்க இருக்கும் நிலையில் அப்பா விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா, மகன் விஜய்க்கு ஜோடியாக இந்த பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் அபர்ணா தாஸ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ‘தளபதி 68’ திரைப்படம் பூஜை போடும் முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments