'தளபதி 68' படத்தின் கதை இதுவா? வேற லெவலில் யோசித்த வெங்கட்பிரபு..!

  • IndiaGlitz, [Monday,August 28 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 68வது திரைப்படம் ’தளபதி 68’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் அப்பா - மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடிக்க இருப்பதாகவும் இரண்டு கேரக்டர்களை 3D VFX ஸ்கேன் டெக்னாலஜி மூலம் உருவாக்குவதற்காக விஜய் உள்பட படக்குழுவினர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் அப்பா - மகன் கேரக்டரில் விஜய் நடிக்க இருக்கும் நிலையில் இதில் ஒரு கேரக்டர் ரா ஏஜென்ட் என்றும் அப்பா மகன் இடையே ஏற்படும் மோதல் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் திரைக்கதை ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக இருக்கும் என்றும் வேற லெவல் காட்சிகளை விஜய்க்காக வெங்கட் பிரபு யோசித்து வைத்திருப்பதாகவும் இந்த படம் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

இரட்டை வேடங்களில் விஜய் நடிக்க இருக்கும் நிலையில் அப்பா விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா, மகன் விஜய்க்கு ஜோடியாக இந்த பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் அபர்ணா தாஸ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ‘தளபதி 68’ திரைப்படம் பூஜை போடும் முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

90வது பிறந்த நாளில் அசத்தலாக நடனமாடும் எம்ஜிஆர்-சிவாஜி காலத்து நடிகை..!

எம்ஜிஆர், சிவாஜி காலத்து நடிகை தனது 90 வது பிறந்தநாளில் அசத்தலாக டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது 

அது கண்டிப்பாக தவறுதான், மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.. 'சந்திரமுகி 2' இசை வெளியீட்டு விழா குறித்து ராகவா லாரன்ஸ்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகிறாரா ஓவியா? அப்ப 2 வீ டு கான்செப்ட் என்பது இதுதானா?

விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில்  இந்த சீசனில் இரண்டு பிக்பாஸ் வீடுகள் என்று

என் சந்தோஷ கண்ணீரே.. திருமண நாளில் சிவகார்த்திகேயனின் க்யூட் பதிவு..!

13-வது திருமண நாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து 'என் சந்தோச கண்ணீரே.. என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்

என்னையும் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தார்கள்: கார்த்தியின் 'ஜப்பான்' நடிகை அதிர்ச்சி தகவல்..!

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்கள் என பல ஆண்டுகளாக நடிகைகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தற்போது கார்த்தியின் 'ஜப்பான்' படத்தில் நடித்த நடிகை அனு இமானுவேல்  இதே குற்றச்சாட்டை