பூஜை முடிந்ததும் அர்ச்சனா கல்பாத்தியின் பதிவு.. 'தளபதி 68' படம் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,October 03 2023]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 68வது திரைப்படமான ’தளபதி 68’ படத்தின் பூஜை நேற்று நடந்தது என்ற செய்தியை பார்த்தோம். இந்த படத்தின் பூஜை குறித்த தகவலை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உங்கள் அனைவருடைய அன்பு மற்றும் ஆதரவு காரணமாக நாங்கள் எங்களது 25வது திரைப்படத்தை எங்களது தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து தயாரிக்க உள்ளோம். இந்த படத்தின் பூஜை என்று இனிதே நடந்தது.

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு ’லியோ’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் வெளியாகும். மீண்டும் ஒருமுறை விஜய்யை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற கனவு இன்று நனவாகி உள்ளது. மேலும் ’தளபதி 68’ திரைப்படம் மிகப்பெரிய அதிரடி ஆக்ஷன் படம் என்று தெரிவித்துள்ளார். அர்ச்சனா கல்பாத்தியின் இந்த பதிவுக்கு தற்போது லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.