'தளபதி 68' படத்தின் வில்லன் இந்த பிரபலமா? வேற லெவலில் யோசிக்கும் வெங்கட் பிரபு..!

  • IndiaGlitz, [Tuesday,September 19 2023]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் ஆன ’தளபதி 68’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே இந்த படத்தின் நாயகிகளாக சினேகா மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும் முக்கிய கேரக்டர்களில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய வில்லன் கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. ஏற்கனவே ’தனி ஒருவன்’ திரைப்படத்தில் அட்டகாசமான வில்லன் கேரக்டரில் நடித்த அரவிந்த்சாமி சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கஸ்டடி’ திரைப்படத்தில் கலக்கி இருப்பார்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படமான ‘தளபதி 68’ படத்தில் அரவிந்த்சாமி நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது இந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜிவி பிரகாஷின் 'அடியே' .. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த ஓடிடியில்?

ஜிவி பிரகாஷ் நடித்த 'அடியே' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை  நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இன்றைய 'லியோ' அப்டேட் ரத்து.. என்ன காரணம்?

கடந்த இரண்டு நாட்களாக 'லியோ' படத்தின் அப்டேட் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றும் மாலை 6 மணிக்கு 'லியோ' படத்தின் முக்கிய போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

நேற்று 'ஜெயிலர்' நடிகருடன், இன்று 'லியோ' பட வில்லனுடன்.. அஜித்தின் மாஸ் புகைப்படம் வைரல்..!

நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த மோகன்லாலுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆன நிலையில் இன்று விஜய்யின்

விஜய் ஆண்டனி அப்பாவும் தற்கொலைதான் செய்து கொண்டாரா? அவரே கூறிய அதிர்ச்சி தகவல்..!

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது அப்பாவும்  கடந்த பல ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதை அவரே கூறிய

பாரதிராஜா படத்தில் அறிமுகமான ஹீரோ திடீர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்..!

இயக்குனர் இமயம் பாரதிராஜா அறிமுகம் செய்த ஹீரோ நடிகர் இன்று காலமானதாக செய்திகள் வெளியாகி உள்ளதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.