'தளபதி 68' வில்லன் இவரா? மீண்டும் விஜய்யுடன் மோதும் பிரபலம் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,May 21 2023]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபலம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.



இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஜே சூர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்து இருந்தார் என்பதும், அது மட்டும் இன்றி சமீபத்தில் வெளியான ’வாரிசு’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.



மேலும் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான ’குஷி’ என்ற திரைப்படத்தையும் எஸ்ஜே சூர்யா இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் ’தளபதி 68’ படத்தில் விஜய்க்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதேபோல எஸ்ஜே சூர்யா சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’மாநாடு’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா தற்போது ’மார்க் ஆண்டனி’ ’கேம் சேஞ்சர்’ ’ஜிகர்தண்டா 2’ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து இந்த ஆண்டு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

20 ஆண்டுகளுக்கு பின் விஜய் படத்தில் யுவன்... இதற்கு முன் எந்த படத்தில் இணைந்தார்கள் தெரியுமா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68' திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியான நிலையில் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது

ஆசை தான் நம்ம லைஃபை தீர்மானிக்கின்றது.. சித்தார்த்தின் 'டக்கர்' டிரைலர்..!

சித்தார்த் நடித்த 'டக்கர்' என்ற திரைப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'பிளான் பண்ணி தான் 2000 ரூபாய் நோட்டை தடை பண்ணியிருக்காங்க: விஜய் ஆண்டனி..

 பிளான் பண்ணி தான் 2000 ரூபாய் நோட்டை அரசு தடை செய்துள்ளார்கள் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

'தளபதி 68' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர், இசையமைப்பாளர் பெயரை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 68 வது திரைப்படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று மூலம் தெரிவித்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி

ரஜினி-ஞானவேல் படத்தின் கதை இதுவா? உண்மை சம்பவம் என தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 170 வது திரைப்படத்தை 'ஜெய்பீம்' இயக்குனர் ஞானவேலு இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது