close
Choose your channels

'தளபதி 68' படத்தின் தயாரிப்பாளர் இவர் தானாம்.. அப்ப இயக்குனர் அட்லி இல்லையா?

Monday, April 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 67-வது திரைப்படம் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் 68 வது படத்தை தயாரிக்க பட தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. குறிப்பாக சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் ’தளபதி 68’ படத்தை தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’தளபதி 68’ திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே விஜய் நடித்த ’ஜில்லா’ படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருந்தது என்பதும் அதற்கு முன்னர் விஜய் நடித்த ’திருப்பாச்சி’ ’லவ் டுடே’ ஆகிய படங்களையும் இந்நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை அட்லி இயக்க வாய்ப்பு இல்லை என்றும் வேறொரு பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாகவும் இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment