'தளபதி 68' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர், இசையமைப்பாளர் பெயரை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிக்க இருக்கும் 68 வது திரைப்படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று மூலம் தெரிவித்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
தளபதி விஜயின் 68 வது திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைதளத்தில் இது குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் தளபதி விஜய் அவர்களுடன் எங்கள் 25வது தயாரிப்பு திரைப்படத்தில் இணைவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார். ’தளபதி 68’ மற்றும் ’ஏஜிஎஸ் 25’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்றும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்றும் அந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
’தளபதி 68’ திரைப்படத்தை இயக்குவது யார் என்று கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில் தற்போது இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு பதிலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் இடம்பெறும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
It is our honor and privilege to collaborate once again with our #Thalapathy @actorvijay Sir for our 25th Film ❤️ #Thalapathy68 #Ags25 will be directed by the brilliant @vp_offl and music by @thisisysr Need all your love and support ❤️ This movie is going to be super special 🙌🏼… pic.twitter.com/tTcbZL0tv6
— Archana Kalpathi (@archanakalpathi) May 21, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments