'தளபதி 68' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர், இசையமைப்பாளர் பெயரை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்

  • IndiaGlitz, [Sunday,May 21 2023]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 68 வது திரைப்படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று மூலம் தெரிவித்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜயின் 68 வது திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைதளத்தில் இது குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் தளபதி விஜய் அவர்களுடன் எங்கள் 25வது தயாரிப்பு திரைப்படத்தில் இணைவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார். ’தளபதி 68’ மற்றும் ’ஏஜிஎஸ் 25’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்றும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்றும் அந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

’தளபதி 68’ திரைப்படத்தை இயக்குவது யார் என்று கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில் தற்போது இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு பதிலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் இடம்பெறும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினி-ஞானவேல் படத்தின் கதை இதுவா? உண்மை சம்பவம் என தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 170 வது திரைப்படத்தை 'ஜெய்பீம்' இயக்குனர் ஞானவேலு இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது

ரூ.100 கோடி வசூல் செய்த சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனருடன் மீண்டும் சிவகார்த்திகேயன்..?

ரூ.100 கோடி வசூல் செய்த சிவகார்த்திகேயன் படத்தை இயக்கிய இயக்குனருடன் அவர் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்.. என்ன பணி செய்துள்ளார் தெரியுமா?

தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் புதிதாக தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும்

'டேய்.. இது 'மரகத நாணயம்' கதைடா.. ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்' டிரைலர்..!

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த 'வீரன்' என்ற திரைப்படம் வரம் ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சென்னையில் மூடப்பட்ட பழமையான தியேட்டரை வாங்கினாரா நயன்தாரா? பரபரப்பு தகவல்..!

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட பழமையான திரையரங்கை நடிகை நயன்தாரா விலைக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.