close
Choose your channels

’தளபதி 68’ படத்தில் இணைந்த சிம்பு, தனுஷ் படத்தின் பிரபலம்..!

Monday, July 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை விஜய் முடித்தார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’லியோ’ படத்தின் பணிகளை முழுவதும் முடித்துவிட்ட விஜய், இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க இருப்பதாகவும் அதன் பின்னர் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 68’ படத்தை இயக்க இருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு திரைக்கதை அமைக்கும் பணியை கிட்டத்தட்ட முடித்து விட்டதாகவும் அடுத்த கட்டமாக நட்சத்திரங்கள் தேர்வுகளை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அவர் இந்த படத்தின் ஒளிப்பதிவாளரை முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ மற்றும் தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ ஆகிய படங்கள் உள்பட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சித்தார்த்தா நுனி என்பவர் தான் ’தளபதி 68’ படத்தின் ஒளிப்பதிவாளர் என்று கூறப்படுகிறது.

‘தளபதி 68’ படத்தில் இன்னும் யார் யாரெல்லாம் இணைய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment