2 பாலிவுட் 'கான்' நடிகர்கள்.. பிரசாத்-பிரபுதேவா.. வேற லெவலில் உருவாகும் 'தளபதி 68'

  • IndiaGlitz, [Friday,September 08 2023]

பாலிவுட் திரையுலகின் 2 முன்னணி ’கான்’ நடிகர்கள் மற்றும் பிரசாந்த், பிரபுதேவா என ’தளபதி 68’ படத்தின் நட்சத்திரங்கள் தேர்வு வேற லெவலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்பதும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து கசிந்து வரும் தகவல்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானை படக்குழுவினர் தொடர்பு கொண்டதாக கூறப்படும் நிலையில் தற்போது ஷாருக்கானையும் தொடர்பு கொண்டிருப்பதாகவும் இருவரும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரசாந்த் இந்த படத்தில் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அவருடைய தந்தை தியாகராஜன் உறுதி செய்துள்ளதாகவும் இறுதி கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரபுதேவா இந்த படத்தில் நடிப்பதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெங்கட்பிரபுவின் நட்சத்திர தேர்வை பார்க்கும்போது இந்த படம் வேற லெவலில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகும் என்றும் படப்பிடிப்புக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

More News

மகனின் முகத்தை முதல்முறையாக காட்டிய அட்லி.. க்யூட் புகைப்படம் வைரல்..!

இயக்குனர் அட்லி தனது மகனின் முகத்தை முதன்முதலாக காட்டும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரஜினிக்கு மட்டுமல்ல.. 'ஜெயிலர்' லாபத்தை மருத்துவ துறைக்கும் பகிர்ந்த சன் பிக்சர்ஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழ் திரையுலகில் வசூல் சாதனை செய்தது என்பதையும் பார்த்தோம்.

இசைஞானி இசையில், ஸ்வேதா மேனன் குரலில் உருக வைக்கும் பாடல்.. 'ஆர் யூ ஓகே பேபி' சிங்கிள்..!

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான திரைப்படம் 'ஆர் யு ஓகே பேபி'.  இந்த படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில்

40 நாட்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்: 'லியோ' செய்த சாதனை..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பிரிட்டன் நாட்டில் நடந்தது.

மீண்டும் 'லால்சலாம்' படத்திற்கு வந்த ரஜினிகாந்த்.. ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம் வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'லால் சலாம்' என்ற படத்தில்