'ஆபாசத்தின் உச்சம்.. இதெல்லாம் ஒரு படமா? வெளுத்து வாங்கிய 'தளபதி 68' பிரபலம்..!

  • IndiaGlitz, [Thursday,December 14 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68 ’படத்தின் பிரபலம் ஒருவர் சமீபத்தில் வெளியான ’அனிமல்’ படத்தை பார்த்து இந்த படம் ஆபாசத்தின் உச்சம் என்று கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 68’ படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த் நுனி, சமீபத்தில் ஹைதராபாத்தில் ’அனிமல்’ திரைப்படத்தை பார்த்ததாகவும் அந்த படத்தை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

ராம்கோபால் வர்மா, அனுராக் காஷ்யப் போன்ற பல பிரபலங்கள் ’அனிமல்’ படத்தை பார்த்து பாராட்டிய நிலையில் இவர் ’அனிமல்’ படத்தை கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:

’அனிமல்’ படத்தை பார்த்து எனக்கு எந்த ஒரு இன்ஸ்பிரஷனும் வரவில்லை. அதற்கு பதிலாக நாஜிக்களின் புகழாரம், ஆணாதிக்க மனநிலை ஆகியவை ஆபாசத்தின் உச்சமாக இருக்கிறது. மேலும் கடைசி காட்சியான மனைவியை பலாத்காரம் செய்யும் காட்சி அசிங்கமாக உள்ளது.

இந்த படம் என்னதான் வசூலில் சாதனை செய்தாலும் மிக மோசமான படம். அதுமட்டுமின்றி ’ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்ட இந்த படத்தை பலர் குழந்தைகளுடன் வந்து பார்க்கின்றனர். அதை பார்க்கும்போது மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எந்த ஒரு சமூக அக்கறையும் இல்லாமல் குழந்தைகளை இந்த படத்தை பார்க்க எப்படி அனுமதிக்கிறார்கள் என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

அர்ச்சனா கூறிய ஒரு வார்த்தை.. துள்ளி குதித்து ஆச்சரியம் அடைந்த பூர்ணிமா. காண்ட்டான மாயா..!

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டான்ஸ் மாரத்தான் என்ற டாஸ்க் வைக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டு அவர்களுக்கான பாடல் ஒலிக்கப்பட்டு

'லியோ' மடோனாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்.. பிரபல நடிகருக்கு ஜோடியாகும் வாய்ப்பு..!

சமீபத்தில் வெளியான விஜய்யின் 'லியோ' படத்தில் அவருடைய தங்கை கேரக்டரில் நடித்த மடோனா செபாஸ்டியனுக்கு பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அஜர்பைஜானில் டின்னர்.. 'விடாமுயற்சி' படத்தின் டிரிபிள் A நட்சத்திரங்களின் மாஸ் புகைப்படம்..!

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்புக்கு பின்னர் டிரிபிள் A நட்சத்திரங்கள் டின்னர்

30 நிமிடங்கள் பேசினார் விக்ரம்.. கமிட் ஆகிவிட்டேன்..'சீயான் 62' படம் குறித்து ஜிவி பிரகாஷ்..!

 விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கலான்' மற்றும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை எஸ்.யூ.

இந்த படம் ஒரு நாள் நிச்சயம் வரும்.. 100% கேரண்டி.. ஜிவி பிரகாஷின் கனவுப்படம்..!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாக இருந்த கனவு படம் தள்ளிப் போய் உள்ளதாகவும் ஆனால் 100% சதவீதம் இந்த படம் நிச்சயம் ஒரு நாள் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.